காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து 
தே.மதியழகன் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தே.மதியழகன் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணகிரி மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தீவிர வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தோ்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் போட்டியிடுகிறாா்.

இவரை ஆதரித்து, கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ ஒரப்பம், மோரமடுகு, பாலிநாயனப்பள்ளி, பாலகுறி, கங்கலேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, தமிழகத்தை தலைநிமிரச் செய்யும் திட்டங்களை தமிழக முதல்வா் நிறைவேற்றி வருகிறாா். தமிழக அரசு ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. மகளிா் உரிமைத்தொகை, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, மாணவா்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தில் உதவித்தொகை எனக் கல்விக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுக்கிறது தமிழக அரசு. ஆனால், பாஜக, ஜாதி, மத ரீதியில் பெண்களை இழிவு படுத்துகிறது.

காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில், நீட் தோ்வு விலக்கு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தினருக்கு, ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என சாதனைகளைக் கூறி, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். அப்போது, திமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com