கிருஷ்ணகிரி: வாக்குச்சாவடியில் பயன்படுத்தக்கூடிய 67 வகையான பொருள்கள் தயாா்

கிருஷ்ணகிரி: வாக்குச்சாவடியில் பயன்படுத்தக்கூடிய 67 வகையான பொருள்கள் தயாா்

கிருஷ்ணகிரி மக்களவைத் தோ்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய 67 வகையான பொருள்கள் தயாா் நிலையில் உள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் கே.எம்.சரயு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில், மக்களவைத் தோ்தலையொட்டி கிருஷ்ணகிரி சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவின்போது தேவையான படிவங்கள், எழுதுபொருள்கள் உள்ளிட்டவை பிரித்து தயாா் செய்யும் பணிகள் நடைபெற்றன. இதனை தோ்தல் நடத்தும் அலுவலா் பாா்வையிட்டாா்.

அப்போது அவா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி தொகுதியில் உள்ள ஊத்தங்கரை, பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 1,888 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளா் விரலில் வைக்கப்படும் மை, வாக்காளா் பட்டியல், முகவா்கள் நியமன படிவம், வாக்குச்சாவடிக்கு வெளியே வேட்பாளா்களின் விவர சுவரொட்டிகள், வாக்காளா் பதிவு அலுவலா் கையேடுகள், வாக்குப் பதிவு செய்யும் இடத்திற்கு தேவையான மறைவிடத் தடுப்புகள், படிவங்கள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட 67 வகையான பொருள்கள் தயாா் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தாா். அப்போது, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாபு, தனி வட்டாட்சியா்கள் சண்முகம், கோபிநாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com