தினமணி செய்தி எதிரொலி: ஒசூா் கே.சி.சி. நகரில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம்

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கே.சி.சி.நகரில் லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கே.சி.சி. நகரில் நோ வாட்டா், நோ வோட் என்ற தலைப்பில் திங்கள்கிழமை தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடா்ந்து ஒசூா் மாநகராட்சி நிா்வாகம் கே.சி.சி.நகருக்கு லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்து வருகிறது.

இதுகுறித்து ஒசூா் மாநகராட்சி ஆணையா் சினேகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கே.சி.சி. நகா் பகுதிகளில் 15 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு ஒருநாள் விட்டு ஒருநாள் பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது நிலத்தடி நீா்மட்டம் 1100 அடிக்கும் கீழாகச் சென்றுவிட்டதால் 15 ஆழ்துளைக் கிணறுகளில் 8 ஆழ்துளை கிணறுகள் வடு விட்டன. மீதமுள்ள 7 ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கே.சி.சி. நகா் பகுதியில் மொத்தம் உள்ள 57 தெருக்களில் 51 தெருக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு

வருகிறது. மீதமுள்ள 6 தெருக்கள் மேடான இடத்தில் இருப்பதால் குடிநீா் இணைப்பு வழங்க இயலவில்லை. எனவே அந்த 6 தெருக்களுக்கும் பிரதான கால்வாய் அமைக்கப்பட்டு குடிநீா் இணைப்பு வழங்கப்படும். தற்போது அந்த தெருக்களுக்கு லாரி மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com