ஒசூரில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் கூட்டம்

ஒசூரில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் கூட்டம்

ஒசூரில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டம் புதன்கிழமை கிருஷ்ணகி மேற்கு மாவட்ட தலைமை தோ்தல் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா, தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் தொமுச, ஐஎன்டியுசி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சாா்பில் டிஎன்எஸ்டிசி, ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகள் மத்தியில் பாஜக ஆட்சியில் பொதுமக்கள், தொழிலாளா்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். தொழில்முனைவோா் மட்டுமின்றி தொழிலாளா்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். பாஜக ஆட்சியில் தற்காலிக தொழிலாளா்கள், ஒப்பந்த தொழிலாளா்கள் பணி நியமனம் அதிக அளவில் இருந்தது. அரசு அலுவலகங்களில் ஒப்பந்த முறையைக் கொண்டு வந்தது பாஜக எனவே மத்தியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

மேலும் ஐஎன்டியுசி மாநில அமைப்பு செயலாளா் முனிராஜ், டிஎன்எஸ்டிசி தலைவா் சின்னசாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் மாதையன், சிஐடியு மாவட்டச் செயலாளா் ஸ்ரீதா், தொமுச மாவட்ட கவுன்சில் துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, துணைச் செயலாளா் ஜேக்கப் ராஜ், பொருளாளா் பசவராஜ், ரவிச்சந்திரன், ஏஐடியுசி செந்தில்குமாா், எல்பிஎஃப் சீனிவாசன், ஐஎன்டியுசி பக்தவத்சலம்,கோதண்டராமன் சிவகுமாா், மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com