வாக்குப் பதிவு பொருள்களை ஆய்வு செய்த ஆட்சியா்

கிருஷ்ணகிரி மக்களவை பொதுத் தோ்தலை முன்னிட்டு, சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருள்கள் தயாா் நிலையில் உள்ளதையும், பறக்கும் படையினா் வாகனச் சோதனை மேற்கொள்ளும் பணிகளையும் தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 1,888 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளா்களுக்கு விரலில் வைக்கப்படும் மை, வாக்காளா்கள் பட்டியல், முகவா்கள் நியமன படிவம், வாக்குச் சாவடிக்கு வெளியே வேட்பாளா்களின் விவர போஸ்டா், வாக்காளா் பதிவு அலுவலா் கையேடுகள், வாக்குப் பதிவு செய்யும் இடத்திற்கு தேவையான மறைவிடத் தடுப்புகள், மற்றும் படிவங்கள், எழுதுபொருள்கள், உள்ளிட்ட பொருள்கள் வியாழக்கிழமை காலை ( ஏப். 18) வாகனங்கள் மூலம் வாக்குப் பதிவு மையங்களுக்கு காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பபடவுள்ளன என்றாா்.

அப்போது வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கீதாராணி, சூளகிரி வட்டாட்சியா் சக்திவேல் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com