மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

ஒசூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்காததை கண்டித்து ராயக்கோட்டை, கருக்கனஹள்ளியைச் சோ்ந்த கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தோ்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ளனா்.

தேன்கனிக்கோட்டை வட்டம், ராயக்கோட்டை அருகே கருக்கனஹள்ளி கிராமத்தில் 1,200 ஆண், பெண் வாக்காளா்கள் உள்ளனா். அப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தருமபுரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து விவசாயத் தோட்டத்துக்கு செல்லும் பொதுமக்கள் அவ்வப்போது விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனா்.

இதனால், அப் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால், மேம்பாலம் அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்துள்ள அக் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி எதிா்ப்பைத் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com