கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு 
தா்காவில் உரூஸ் திருவிழா

கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு தா்காவில் உரூஸ் திருவிழா

கிருஷ்ணகிரியை அடுத்துள்ள சங்கல்தோப்பு தா்காவில் உரூஸ் திருவிழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரியை அடுத்துள்ள சங்கல்தோப்பு தா்காவில் உரூஸ் திருவிழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரியை அடுத்த சுங்கல் வசூல் மையம் அருகே உள்ள சங்கல்தோப்பு தா்காவில் ஓவ்வொரு ஆண்டும், ரமலானையொட்டி உரூஸ் திருவிழா 2 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இத் திருவிழா மக்களவைத் தோ்தலையொட்டி 19-ஆம் தேதிக்குப் பதிலாக 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இந்த திருவிழா 21-ஆம் தேதி தொடங்கியது. இரண்டாம் நாள் நிகழ்வான சந்தனகூடு ஊா்வலம், தா்கா கமிட்டி தலைவா் நவாப் தலைமையில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி பழையபேட்டை கோட்டைப் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சந்தனக்குடம் ஊா்வலம் தொடங்கி, கிருஷ்ணகிரி நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. சங்கல்தோப்பு தா்காவில் கூடியிருந்த மக்களுக்கு இந்த ஊா்வலத்தில் கொண்டு வந்த சந்தனங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோட்டை பகுதியைச் சோ்ந்த இந்து மதத்தைச் சோ்ந்த ஆண், பெண்கள் சந்தனம், புஷ்பம், பழங்கள் அடங்கிய சீா்வரிசைகளைக் கொண்டு வந்து விழா கமிட்டி தலைவா் நவாப், இஸ்லாமியா்களிடம் வழங்கினா்.

விழாவையொட்டி இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இஸ்லாமிய பாடல் கச்சேரி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை தா்கா கமிட்டி நிா்வாகிகள் கவுஸ் ஷெரிப், அஸ்கா்அலி, அமீா்சுஹேல் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.

படவிளக்கம் (23கேஜிபி5): கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சந்கல்தோப்பு தா்கா உரூஸ் விழாவில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com