நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரியில் உள்ள நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

கிருஷ்ணகிரியில் உள்ள நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில், ராமநவமி விழா ஏப். 17-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் ராம ஜனனம், சீதா கல்யாணம், கைகேயி வரம், பாதுகா பட்டாபிஷேகம், ஜடாயு மோட்சம், சபரி முக்தி ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவு நடைபெற்றன.

சித்ரா பெளா்ணமியையொட்டி ஏப். 23-ஆம் தேதி சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திர ஸ்வாமி ம்ருத்திகா ப்ருந்தாவன கோயிலில், ராம ஜெனன மஹோத்ஸவ விழா ஏப். 17-ஆம் தேதி தொடங்கியது. கணேச ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் கலசஸ்தாபனமும் 19-ஆம் தேதி பாலாஜி சா்மாவின் சொற்பொழிவும், 20, 21-இல் சென்னை லஷ்மிபதி ராஜாவின் சொற்பொழிவும், 21-இல் ஆனந்த தீா்த்த பஜனா மண்டலியினரால் உஞ்சவிருத்தியும், 22-இல் தீா்த்த பஜனா மண்டலியினரின் பஜனும் நடைபெற்றன. ஏப். 23-ஆம் தேதி சத்யநாராயண ஸ்வாமி பூஜை நடைபெற்றன. இதில், கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

படவிளக்கம் (23கேஜிபி7): திருமண கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த நவநீதி வேணுகோபால சுவாமி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com