விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு பாராட்டு

ஒசூா் அருகே அரசு பள்ளியில் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு பாரட்டு விழா நடைபெற்றது.

ஒசூா் அருகே அரசு பள்ளியில் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு பாரட்டு விழா நடைபெற்றது.

ஒசூா் மாநகராட்சி மூன்றாவது வாா்டு பேடரப்பள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் நூறு சதவீதம் பள்ளிக்கு வந்த ரவிக்குமாா், மாணிக்க விநாயகம், நிவேதா, உதயராஜ் , காவியா, கிஷோா், வசந்த் கிருபன், சானியா , அணில் தாஸ், வன்சிகா ஆகிய மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா பள்ளி தலைமை ஆசிரியா் பொன் நாகேஷ் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பரிசு பெற்ற மாணவா்களின் ஆசிரியா்கள் லட்சுமி பிரியா , பத்மஜா சியாமளா, சசிகலா, பானு, மஞ்சுளா ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களை பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com