கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட பாஜக நிா்வாகிகள் மீது நடவடிக்கை

கிருஷ்ணகிரி மக்களவைத் தோ்தல் பணிகளில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட பாஜக நிா்வாகிகள் அவா்கள் வகித்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி கிழக்கு பாஜக மாவட்டத் தலைவா் சிவபிரகாஷ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக பாஜக மாநில துணைத் தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான ராமலிங்கம், மாநில செயலாளரும், மாவட்ட பாா்வையாளருமான வெங்கடேசன் ஆகியோரின் ஒப்புதலின்படி அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலின் போது, கட்சியின் கொள்கைக்கு எதிராகவும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையிலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பாஜக மாவட்டச் செயலாளா்கள் வரதராஜன், சிவக்குமாா், தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளா்ச்சிப் பிரிவு மாநில செயலாளா் திருமுருகன் ஆகியோா் கட்சியில் தாங்கள் வகித்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

அதேபோல கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையிலும், கட்சியின் கட்டுப் பாட்டை மீறி சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டவரின் பொது முகவராகச் செயல்பட்டு ஓட்டுகளைச் சேகரித்த காரணத்தால் கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவா் சுரேஷ், கட்சியின் அனைத்து நிலை பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com