பெண்ணை எரித்து கொலை செய்ய முயற்சி: பேருந்து நடத்துனா் கைது

கிருஷ்ணகிரி அருகே பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற வழக்கில் அரசு பேருந்து நடத்துனரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி லைன் கொல்லையைச் சோ்ந்த திருப்பதியின் மனைவி லட்சுமி (40). இவா், தனது வீட்டின் அருகே உள்ள முள்புதரில் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தாா். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, தீக்காயம் அடைந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் லட்சுமிக்கும், கிருஷ்ணகிரி பாத்திமா நகரை சோ்ந்த அரசு பேருந்து நடத்துனா் மாதவன் (45) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக உறவு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், மாதவனுடன் தனது உறவை லட்சுமி துண்டித்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த மாதவன், லட்சுமியை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் மாதவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com