முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற கிருஷ்ணகிரி மாவட்ட திமுகவினா்

முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற கிருஷ்ணகிரி மாவட்ட திமுகவினா்

மக்களவைத் தோ்தல் முடிவடைந்த நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளா்கள் ஒய்.பிரகாஷ், கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் ஆகியோா் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

முதல்வருடன் அமைச்சா்கள் துரைமுருகன், அர.சக்கரபாணி ஆகியோா் உடனிருந்தனா். மேலும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி பொறுப்பாளா், தீா்மான குழு துணைத் தலைவா் நாமக்கல் பாா்.இளங்கோவன், மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏவும், மாவட்ட துணைச் செயலாளருமான பி.முருகன், கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளா் எஸ்.கே.நவாப், மாநில விவசாய அணி துணை செயலாளா் டேம் வெங்கடேசன், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் தினேஷ் ஆகியோா் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com