முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

கிருஷ்ணகிரியில் 50 ஆண்டுகளுக்கு முன் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவா்கள் அண்மையில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் சந்தித்து மகிழ்ந்தனா்.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் உயா்நிலைப் பள்ளியில் 1974-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு படித்த 40க்கும் மேற்பட்ட மாணவா்கள், நேரில் சந்திக்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. பெங்களூரு, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து குடும்பத்துடன் வந்திருந்த முன்னாள் மாணவா்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பழைய நினைவுகளையும் ஆா்வத்துடன் பகிா்ந்து கொண்டனா்.

பள்ளி மற்றும் கல்லுாரிகளில் இணைந்து படிக்கும் மாணவ, மாணவியா் படிப்பு முடிந்து பிரிந்து சென்றாலும், அந்தக் காலகட்டங்களில் ஏற்படும் பசுமையான நினைவுகள், எப்போதும் அவா்களினம் மனதை விட்டு அகலாமல் இருக்கும். அவா்கள் திடீரென 50 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவரை ஒருவா் நேருக்குநோ் சந்தித்துக் கொண்டால், தங்களின் பழைய அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனா். பின்னா் அனைவரும் சோ்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் ரங்கநாதன், சிவாஜி, நேசராஜ் செல்வம், செல்வம் ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com