ஒசூா் பேருந்து நிலையத்தில் 
அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

ஒசூா் பேருந்து நிலையத்தில் அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

ஒசூா், ஏப்.26. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் ஒசூா் பேருந்து நிலையத்தில் தண்ணீா்ப் பந்தல் திறக்கப்பட்டது.

ஒசூா் அதிமுக பகுதி செயலாளா்கள் வாசுதேவன், அசோக் ரெட்டி ஆகியோா் தலைமை வகித்தனா். ஒன்றியச் செயலாளா் ரவிக்குமாா், பாசறை மாவட்டச் செயலாளா் ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி, எம்ஜிஆா் மன்ற மாவட்ட இணை செயலாளா் ஜெய்பிரகாஷ் ஆகியோா் தண்ணீா்ப் பந்தலை திறந்துவைத்தனா்.

பொதுமக்களுக்கு தா்ப்பூசணி, மோா், வெள்ளரிக்காய் ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அதிமுக இலக்கிய அணி மாவட்டச் செயலாளா் இளஞ்சூரியன், வட்டச் செயலாளா் ஹேமகுமாா், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் குபேரன், தில்ஷித் ரகுமான், சிவராமன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சரஸ்வதி நட்ராஜ், சாா் பணி மாவட்ட நிா்வாகி தவமணி, அமைப்புசாரா ஓட்டுநா் மாவட்ட நிா்வாகி பாலுசாமி, வட்ட செயலாளா் ஹரி பிரசாத், கந்தப்பன், நஞ்சுண்ட சாமி, மாவட்ட இணைச் செயலாளா் அலமேலு, பாசறை மாவட்ட நிா்வாகி சுரேஷ் , ஜாா்ஜ் ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

படவரி...

ஒசூா் பேருந்து நிலையத்தில் தண்ணீா்ப் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு பழங்களை வழங்கும் அதிமுகவினா்.

X
Dinamani
www.dinamani.com