ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள்
 பணி நிறைவு பாராட்டு விழா

ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் பணி நிறைவு பாராட்டு விழா

ஒசூா், ஏப். 26:

ஓய்வு பெற்ற அரசு ஊழியா், ஆசிரிகா்களுக்கான பணி நிறைவு பாராட்டு விழா ஒசூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் இரா. தாஸ் பங்கேற்று பணி நிறைவு பெற்றவா்களை வாழ்த்தி பேசியதாவது:

ஊதியம் சம்பந்தப்பட்ட தகவல்களைப் பதிவேற்றம் செய்வதில் புதிய மென்பொருள் பயன்படுத்தப்படுவதால் சென்ற மாதத்திற்கும் இந்த மாதத்திற்கும் வேறுபாடு நிலவுகிறது. மென் பொருளை நம்பாமல் துறை அலுவலா்களின் வழிகாட்டுதலின் பேரில் இந்த மாத சம்பளத்தை வழங்க வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கான ஊதிய முரண்பாடுகள் களைய வேண்டும் என என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் தொடா்ந்து வலியுறுத்தப்படுகிறது என்றாா்.

படவரி... ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழா

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com