கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

கருப்பசாமி கோயிலுக்கு லாரியில் கொண்டு சென்ற 45 அடி உயர அரிவாள்.
கருப்பசாமி கோயிலுக்கு லாரியில் கொண்டு சென்ற 45 அடி உயர அரிவாள்.

ஒசூா், பாகலூா் சாலையில் சமத்துவபுரம் அருகே உள்ள கருப்புசாமி கோயிலுக்கு 45 அடி உயரம், 720 கிலோ எடை கொண்ட இரும்பு அரிவாள் காணிக்கையாக வழங்கப்பட்டது.

ஒசூரை அடுத்த பூனப்பள்ளி பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி பக்தரான பிரபாகா் தனது வேண்டுதல் நிறைவேறினால் சுவாமிக்கு 45 அடி உயரமும் 720 கிலோ எடை கொண்ட இரும்பு அரிவாளை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டியுள்ளாா். அவரது வேண்டுதலும் நிறைவேறியது.

இதையடுத்து ஒசூா், சீதாராம் பகுதியில் உள்ள ஆச்சாரி கைலாசத்தின் உதவியுடன் 45 அடி உயரமும் 720 எடை கொண்ட இரும்பு அரிவாளை உருவாக்கி கன்டெய்னா் லாரியில் வைத்து கோயிலுக்கு எடுத்துச் சென்று காணிக்கையாக செலுத்தினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com