சாலை விபத்தில் இளைஞா் பலி

சூளகிரி அருகே காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ராகவேந்திரா (29). இவா் கடந்த 23 ஆம் தேதி கிருஷ்ணகிரி- ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் அட்டகுறுக்கி அருகே சாலையை கடக்க முயன்றாா். அப்போது, அந்த வழியாக சென்ற காா் மோதியதில் பலத்த காயமடைந்த ராகவேந்திரா, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற சூளகிரி போலீஸாா், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com