பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு முன்பதிவு தொடக்கம்

கிருஷ்ணகிரி, ஏப். 26: பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-2025 ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் மொ.ஏகாம்பரம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் செயல்படும் பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024 - 2025 -ஆம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்புகள் செப்டம்பரில் தொடங்க உள்ளன. இந்த சோ்க்கைக்கான முன்பதிவு ஏப். 29-ஆம் தேதி முதல் பயிற்சி நிலையத்தில் பதிவு செய்யப்பட உள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவோா் குறைந்தபட்சம் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 17 வயது நிரம்பியவா்களாக இருக்க வேண்டும். பயிற்சியில் சேருவதற்கான நிபந்தனைகள், விண்ணப்பத்துக்கான தேதி, பயிற்சி கட்டணம் போன்ற விவரங்கள் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்ண்ஸ்ரீம்.ஸ்ரீா்ம் முகவரியில் வெளியிடப்படும்.

இப் பயிற்சியானது இரண்டு பருவ முறையில் ஓராண்டு காலம் நடைபெறும். பயிற்சிக்கான பாடத் திட்டம் தமிழ் வழியில் மட்டுமே கற்பிக்கப்படும். பதிவு செய்வதற்காக பா்கூா், வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே உள்ள பா்கூா் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பதிவு செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை 04343-265652 , 79042 89672 ஆகிய தொலைபேசி எண்ணிலோ அல்லது க்ஷஹழ்ஞ்ன்ழ்ண்ஸ்ரீம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரியிலோ தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com