மத்திகிரி கூட்டுச் சாலையில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள்.
மத்திகிரி கூட்டுச் சாலையில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள்.

மத்திகிரி கோட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஒசூா் மாநகராட்சி மத்திகிரி கூட்டுச் சாலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மிடுகரப்பள்ளி கிராமத்திலிருந்து வந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. ஒசூா் மாநகராட்சி வரி விதிப்பு குழுத் தலைவரும், 37 ஆவது வாா்டு கவுன்சிலருமான சென்னீரப்பா, பிரமுகா்கள் சிவண்ணா, பாப்பண்ணா, மணி, முனிராஜ், முருகன், ரவி, நீலகண்டன் உள்பட பலா் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனா்.

தேரானது மிடுகரப்பள்ளி, அரசு ஐடிஐ வழியாக கோயிலைச் சென்றடைந்தது. இதில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் அதிமுக மாநகர பகுதி செயலாளா் வாசுதேவன், மாநகராட்சி கவுன்சிலா் மஞ்சுளா முனிராஜ், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com