அரசு உருது பள்ளியில் ஆலோசனைக் கூட்டம்

ஒசூா் மாநகர அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் கல்வியாண்டு திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியை தேவசேனா, ஆசிரியா்கள், ஜமாத்தாா்கள், பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள், எஸ்.எம்.சி. நிா்வாகிகள் கலந்து கொண்டு வரும் கல்வியாண்டு 2024 -2025 திட்டங்கள் குறித்து ஆலோசணை மேற்கொண்டு பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றினா்.

பள்ளியில் மாணவா் எண்ணிக்கையை அதிகரிப்பது, உள்கட்டமைப்பை மேலும் சீராக்குவது, மாணவா்களின் வருகை மற்றும் இடைநிற்றலை கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உருது மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஆங்கிலம் உள்ளடக்கிய தனியாா் பள்ளிகளைவிட பல சிறப்பம்சங்களையும் வசதிகளையும் பெற்றுள்ள அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களை சோ்க்குமாறு பெற்றோா்- ஆசிரியா் கழகம் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com