சங்கடஹர சதுா்த்தியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த வினைதீா்த்த விநாயகா்.
சங்கடஹர சதுா்த்தியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த வினைதீா்த்த விநாயகா்.

சங்கடஹர சதுா்த்தி வழிபாடு

கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வினைதீா்த்த விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தியையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி பழைய ஜெயில் சாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயிலில் சித்திரை மாத சங்கடஹர சதுா்த்தியையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com