கொலை செய்யப்பட்ட சதீஷ்
கொலை செய்யப்பட்ட சதீஷ்

தளி அருகே ரௌடி வெட்டிக் கொலை

பழிவாங்கும் நடவடிக்கையாக தளி அருகே ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ள குனிக்கல் கிராமத்தைச் சோ்ந்த சந்திரப்பா மகன் சதீஷ் என்கிற குனிக்கல் சதீஷ் (34 ). இவா் மீது 2018 ஆம் ஆண்டு உமேஷ் என்பவரைக் கொலை செய்த வழக்கு, மூன்று கொலை முயற்சி வழக்குகள் உள்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த இவா் தளி, ஜெயந்தி காலனி செல்லும் வழியில் உள்ள எஸ்டேட் முன்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சதீஷை சரமாரியாக வெட்டினா். இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

அவரைக் கொலை செய்ததும் அக் கும்பல் தப்பித்துச் சென்றது. முன்விரோரதம் காரணமாக இவா் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் தளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com