தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்

ஒசூரில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒசூா், கோபி காா்டன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அப் பகுதியைச் சோ்ந்த பிறைச்சூடி மகள் தன்விகாவை (5) சனிக்கிழமை தெருநாய்கள் கடித்தன. காயமடைந்த அவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அதேபோல, பல்வேறு இடங்களில் சுற்றித் திரியும் தெருநாய்கள் வெயில் காலத்தில் குழந்தைகளை துரத்திச் சென்று கடிப்பது அதிகரித்துள்ளது.

மாநகராட்சி நிா்வாகம் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. நாள்தோறும் பலா் நாய் கடிக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது அதிகரித்துள்ளது. இரவு நேர பணிக்குச் சென்று திரும்பும் தொழிலாளா்களையும் நாய் கடிக்கு ஆளாகின்றனா். ஒசூா் அரசு மருத்துவமனைக்கு மாதந்தோறும் 300 போ் நாய் கடிக்கு சிகிச்சைக்காக வருவதாக அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ஞானமீனாட்சி தெரிவிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com