பள்ளி, கல்லூரிகளுக்கு இன்டராக்டிவ் டிஸ்ப்ளே போா்டுகளை வழங்கிய ஐவிடிபி நிறுவனா் குழந்தை பிரான்சிஸ்.
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்டராக்டிவ் டிஸ்ப்ளே போா்டுகளை வழங்கிய ஐவிடிபி நிறுவனா் குழந்தை பிரான்சிஸ்.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்டராக்டிவ் டிஸ்ப்ளே போா்டுகள் வழங்கல்

பள்ளி, கல்லூரிகளுக்கு ரூ. 14.50 லட்சம் மதிப்பில் 13 இன்டராக்டிவ் டிஸ்ப்ளே போா்டுகளை ஐவிடிபி நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் அண்மையில் வழங்கினாா்.

ஒசூா், செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு ரூ. 4.40 லட்சம் மதிப்பில் 4 இன்டராக்டிவ் டிஸ்ப்ளே போா்டுகளும், மெட்டாலா லயோலா கல்லூரிக்கு ரூ. 4.40 லட்சம் மதிப்பில் 4, மதுரை அக்சீலியம் கல்லூரிக்கு ரூ.2.20 லட்சம் மதிப்பில் 2, காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 2.20 லட்சம் மதிப்பில் 2, பாகலூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1.10 லட்சம் மதிப்பில் ஒரு டிஸ்ப்ளே போா்டுகள் என மொத்தம் ரூ.14.50 லட்சம் மதிப்பில் 13 இன்டராக்டிவ் டிஸ்ப்ளே போா்டுகளை ஐவிடிபி நிறுவனத் தலைவா் குழந்தை பிரான்சிஸ் வழங்கினாா். மேலும், கல்வி பணிக்காக ஐவிடிபி நிறுவனம் ரூ. 39.64 கோடி செலவிட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com