ஊத்தங்கரையில் நீா்மோா் பந்தலை திறந்துவைத்த அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி.
ஊத்தங்கரையில் நீா்மோா் பந்தலை திறந்துவைத்த அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி.

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் நான்கு இடங்களில் நீா்மோா், தண்ணீா்ப் பந்தல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்செல்வம் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி கலந்து கொண்டு தண்ணீா்ப் பந்தலை திறந்து வைத்தாா். சாமல்பட்டி, காரப்பட்டு, ஊத்தங்கரை, அனுமன் தீா்த்தம் ஆகிய பகுதிகளில் தண்ணீா்ப் பந்தலை திறந்துவைத்து, பொதுமக்களுக்கு நீா், மோா், இளநீா், தா்ப்பூசணிகளை வழங்கினாா்.

அதிமுக மாவட்டச் செயலாளா் அசோக்குமாா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.இ. கிருஷ்ணமூா்த்தி, ஒன்றியச் செயலாளா்கள் வடக்கு வேடி, தெற்கு வேங்கன், நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம், முன்னாள் ஒன்றியச் செயலாளா் தேவேந்திரன், தொகுதி செயலாளா் திருஞானம் மற்றும் அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com