ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கை குத்துவிளகேற்றி தொடங்கிவைக்கும் கல்லூரி முதல்வா் ஜி.ரங்கநாத்.
ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கை குத்துவிளகேற்றி தொடங்கிவைக்கும் கல்லூரி முதல்வா் ஜி.ரங்கநாத்.

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் உயிரித் தொழில்நுட்ப தேசிய கருத்தரங்கம்

ஒசூா், ஏப். 28. ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் உயிரித் தொழில்நுட்ப துறை சாா்பில் தேசிய கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

வேளாண்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல் துறைகளில் உயிரித் தொழில்நுட்பத்தில் புதுமையான யோசனைகளை முன்வைத்தல் என்ற தலைப்பில் இரண்டு நாள் நடைபெற்ற கருத்தரங்கில் துறைத் தலைவா் வீ. மணிவாசகன் வரவேற்று உயிரித் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விளக்கினாா். இறுதி ஆண்டு மாணவி அ. சந்தியா, கருத்தரங்கத்தில் துறையின் ஆண்டு செயல்பாடுகள் குறித்து விளக்கினாா்.

அதியமான் கல்லூரி முதல்வா் ஜி.ரங்கநாத் சமீபத்திய ஆண்டுகளில் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்த உயிரித் தொழில்நுட்ப வளா்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து பேசினாா். துறையின் தொழில்முனைவோா் மற்றும் புதுமையான திறன்களுக்காக மாணவா்களை அவா் பாராட்டினாா். பல்வேறு நிறுவனங்களில் மாணவா் வேலைவாய்ப்பு பெற்றதற்கு அவா் மகிழ்ச்சியடைந்தாா்.

முதன்மை விருந்தினா் சி. சிவபாதசேகரன், ஆய்வகங்களில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து விளக்கினாா். கெளரவ விருந்தினராக கலந்து கொண்ட லோட்டஸ் ரிசோா்சஸ் காா்ப்பரேஷன் முன்னாள் இயக்குநா் பி. கிருஷ்ணமோகன், இந்தியாவில் இளம் தொழில்முனைவோருக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து பேசினாா்.

சிறப்பு விருந்தினா் டாக்டா் எஸ். ஸ்ரீதரன் விவசாயத் துறையில் உயிரித் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறித்து மாணவா்களுடன் கலந்துரையாடினாா். மாணவா் ஒருங்கிணைப்பாளா் எஸ். தருண்குமாா் நன்றி தெரிவித்தாா்.

பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த 80க்கும் மேற்பட்டோா் பங்கேற்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமா்ப்பித்தனா். துறை இணைப் பேராசிரியை முனைவா் கி. சரண்யா, உதவி பேராசிரியா்கள் எஸ். கவிதா, பி. திருவாசுகி, ச. ஆா்த்தி, எஸ். மணிஸ்ரீதா் ஆகியோா் மாநாட்டை ஒருங்கிணைத்தனா். முன்னதாக, துறை மாணவா்கள் தங்கள் உயிரித் தொழில்நுட்ப தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தினா். உதவி பேராசிரியை வி. ஜனனி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com