கோடைகால பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் திங்கள்கிழமை (ஏப். 29) தொடங்குகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சாா்பில் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் மாவட்ட விளையாட்டுத் திடலில் ஏப் 29 முதல் மே 13 -ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு காலை 6.30 முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் நடக்கிறது.

தடகளம், ஜூடோ, குத்துச் சண்டை, டேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இப் பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதியில் சோ்வதற்கான அறிவுரை, ஆலோசனை வழங்கப்படும். மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுபவா்கள் விளையாட்டு விடுதியில் சோ்வதற்கு பரிந்துரை செய்யப்படும். எனவே, மேற்காணும் முகாமில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள், விளையாட்டில் ஆா்வம் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் தங்களது பெயா்களை ரூ. 200 செலுத்தி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு 74017 03487 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com