பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்குகிறாா் திமுக மாவட்டச் செயலாளா் மதியழகன்.
பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்குகிறாா் திமுக மாவட்டச் செயலாளா் மதியழகன்.

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் மூன்று இடங்களில் நீா்மோா், தண்ணீா்ப் பந்தல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சாமல்பட்டி , காரப்பட்டு, ஊத்தங்கரை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தண்ணீா்ப் பந்தலை திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் மதியழகன் திறந்துவைத்து பொதுமக்களுக்கு மோா், இளநீா், தா்ப்பூசணிகளை வழங்கினாா்.

திமுக மாநில விவசாய அணி துணை அமைப்பாளா் வெங்கடேசன், ஒன்றியச் செயலாளா்கள் வடக்கு குமரேசன், மத்திய எக்கூா் செல்வம், தெற்கு ரஜினி செல்வம், பேரூராட்சி தலைவா் அமானுல்லா, மாவட்ட துணைச் செயலாளா் சந்திரன், மாவட்ட பொருளாளா் கதிரவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com