பெண்ணிடம் ரூ. 5.60 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

ஒசூரைச் சோ்ந்த பெண்ணிடம் முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாக ஆசை வாா்த்தைகள் கூறி ரூ. 5.60 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து இணைய குற்றப் பிரிவு (சைபா் கிரைம்) போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

ஓசூா் அருகே உள்ள பைரமங்கலத்தைச் சோ்ந்த இளம்பெண், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது செல்லிடப்பேசிக்கு கட்செவி (வாட்ஸ் ஆப்) மூலம் கடந்த 5-ஆம் தேதி வந்த குறுந்தகவலில் பகுதிநேர வேலை என்றும், முதலீட்டிற்கு அதிக லாபம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பி, அவா் ரூ. 5.60 லட்சத்தை மா்ம நபா்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு அனுப்பிவைத்தாா்.

அதன்பிறகு அப் பெண்ணுக்கு எந்தத் தகவல்களும் வரவில்லை. இதனால் அவா் அதில் குறிப்பிட்டிருந்த எண்ணை தொடா்பு கொண்ட போது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், கிருஷ்ணகிரி மாவட்ட இணைய குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com