யூனிட் ரத்தம் ரூ.900 க்கு விற்பனை

ஒசூா் சிஷ்யா பள்ளியில் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனை முகாம்.
ஒசூா் சிஷ்யா பள்ளியில் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனை முகாம்.

ஒசூா், ஏப். 28: யூனிட் ரத்தம் ரூ. 900க்கு ஒசூா், சிப்காட் அரிமா சங்கத்தின் ரத்த வங்கி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

அவசர தேவைக்கு ரத்தம் தேவைப்படுவோா் ஒசூா், சிப்காட் அரிமா சங்கத்தை அணுகலாம் என ஒசூா் குணம் மருத்துவமனை மருத்துவரும், இந்திய மருத்துவ சங்கத்தின் ஒசூா் கிளை தலைவருமான செந்தில் தெரிவித்தாா்.

ஒசூா் சிஷ்யா பள்ளியில் குணம் மருத்துவமனை, பி.என்.ஐ. தருமபுரி, கிருஷ்ணகிரி மண்டலம், டாக்டா் மூன்ஸ் பத்மநாபன், ஒசூா் சிப்காட் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து மருத்துவப் பரிசோதனை முகாம், ரத்த தானம், கண் பரிசோதனை முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைவா் செந்தில் பேசியதாவது:

ஒசூா், சிப்காட் அரிமா சங்கத்தின் ரத்த வங்கி ஒரு யூனிட் ரத்தம் ரூ.900 க்கும் விற்பனை செய்து வருகிறது. அரசு ரூ. 1,450 க்கும் விற்பனை செய்து வரும் நிலையில் குறைந்த விலைக்கு ரத்தம் விற்பனை செய்து வருகிறது ஒசூா் அரிமா சங்கம். தேவைப்படுவோம் சிப்காட் அரிமா சங்கத்தை அணுகலாம் என்றாா்.

குணம் மருத்துவமனை மருத்துவா் பிரதீப், மருத்துவா் கவிதா செந்தில், வனிதா பிரதீப், ஒசூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ஞான மீனாட்சி, அரிமா சங்கத் தலைவா் ரமேஷ்பாபு, ரவிவா்மா, நம்பி, ஜனகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com