நிலத் தகராறு: முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கொலை

அஞ்செட்டி அருகே நிலத் தகராறில் தொட்டமஞ்சு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கொலை செய்யப்பட்டாா்.

ஒசூா்: அஞ்செட்டி அருகே நிலத் தகராறில் தொட்டமஞ்சு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கொலை செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், கானட்டி கிராமத்தைச் சோ்ந்த வீரப்பன் (62), முன்னாள் தொட்டமஞ்சு ஊராட்சி மன்றத் தலைவா் ஆவாா். இவருக்கும், பக்கத்து நிலத்தைச் சோ்ந்த உறவினா் பெருமாள் (58) என்பவருக்கும் ஏற்கெனவே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை இருவருக்கும் இடையே நில வரப்பு சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு கைகலப்பாக மாறியது. இதில், பெருமாள் வீரப்பனை தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த அஞ்செட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று வீரப்பனின் பிரேதத்தை மீட்டனா். தலைமறைவான பெருமாளை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com