பணி நிறைவு பாராட்டு விழா

கிட்டம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி: கிட்டம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்த தமிழ்செல்விக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தலைமையாசிரியா் தாமோதரன் தலைமை வகித்தாா். பெற்றோா் - ஆசிரியா் கழக இணைச் செயலாளா் நாராயணமூா்த்தி, தலைமையாசிரியா்கள் சென்னப்பன், கோவிந்தன், பள்ளி ஆய்வாளா் ஜெயராமன், துணை ஆட்சியா் கோப்பெருந்தேவி, ஆசிரியா்கள் பங்கேற்றனா். பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியா் தமிழ்செல்விக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com