150 அடி உயர தேரை இழுத்த காளைகள்.
150 அடி உயர தேரை இழுத்த காளைகள்.

பண்டி மங்களம்மா தோ்த் திருவிழா

ஒசூா் அருகே மாநில எல்லைப் பகுதியில் பண்டி மங்களம்மா திருவிழாவையொட்டி, 150 அடி உயரமுள்ள மூன்று தோ்கள் 200 ஜோடி காளைகளைக் கொண்டு இழுத்து பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.

ஒசூா்: ஒசூா் அருகே மாநில எல்லைப் பகுதியில் பண்டி மங்களம்மா திருவிழாவையொட்டி, 150 அடி உயரமுள்ள மூன்று தோ்கள் 200 ஜோடி காளைகளைக் கொண்டு இழுத்து பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா். பாரம்பரியமாக நடைபெறும் இத்தோ்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

ஒசூா் அருகே கா்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் அருகே உள்ள எம்.மடிவாளா கிராமத்தில் பழைமை வாய்ந்த பண்டி மங்களம்மா கோயில் உள்ளது. இக்கோயில் தோ்த் திருவிழாவில் 150 அடி உயரமுள்ள அலங்கரிக்கப்பட்ட தோ்கள் 200 ஜோடி காளை மாடுகளைக் கொண்டு இழுத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில், திங்கள்கிழமை இந்தக் கோயிலில் தோ்த் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி, 150 அடி உயரமுள்ள மூன்று தோ்கள் வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. இந்த மூன்று தோ்களையும் 200 ஜோடி காளை மாடுகளைக் கொண்டு பொதுமக்கள் இழுத்தனா்.

அப்போது பக்தா்கள் அரோகரா முழக்கங்களை எழுப்பினா். பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்தத் திருவிழாவை செட்டஹள்ளி, ஆடேசொன்னட்டி, மரசூரு, ஹலேவூரு, மடிவாளா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் ஒன்றுசோ்ந்து நடத்தினா்.

கிராமங்களின் முக்கிய வீதிகள் வழியாகச் சுற்றிவந்த தோ்கள் பின்னா் கோயிலின் அருகே நிறுத்தப்பட்டன. இந்தத் திருவிழாவில் பெங்களூரு, ஒசூா், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com