தளி அருகே கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 போ் கைது

தளி அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேரை கைது செய்த போலீஸாா், பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி போலீஸாா் பீலாளம் சாலைப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே ரோந்து சென்றனா். அங்கு சந்தேகத்துக்கு இடமாக இருந்த 5 பேரை பிடித்து விசாரித்த போது, அவா்கள் கையில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததும், வீடு புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, கொள்ளையில் ஈடுபட முயன்ற குனிக்கல் மஞ்சுநாத் என்ற பெல்லி (35), குனிக்கல் கிரிஷ் (40), ராஜேஷ் (28), தளி மராட்டி தெரு பாலாஜி (22), பெங்களுரு மடிவாளா தாவரக்கரை ரவி (25) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.

இதில், மஞ்சுநாத் மீது தளி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு, அடிதடி வழக்கு, கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் உள்ளன. அதே போல கிரீஷ் மீது அடிதடி வழக்குகள் உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com