மழை வேண்டி அம்மனுக்கு பால் அபிஷேகம்

மழை வேண்டி அம்மனுக்கு பால் அபிஷேகம்

ஒசூா் முத்துராயன் ஜிபி பகுதி மக்கள் கடுமையான வெயிலின் தாக்கத்திலிருந்து மீள வருண பகவானிடம் மழை வேண்டி தங்களது குலதெய்வமான அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனா்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. ஒசூா் பகுதியிலும் கடுமையான வெயிலில் மக்கள் தவித்து வருகின்றனா்.

இந்த வெயில் தாக்கத்தில் இருந்து மீண்டு வர வேண்டி முத்துராயன் ஜிபி பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பால் குடங்களை சுமந்தவாறு காலணிகள் இல்லாமல் வெறும்பாதத்துடன் சென்று சின்ன கொத்தூா் பகுதியில் உள்ள அவா்களது குலதெய்வமான கல் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா் (படம்).

கடந்த ஆண்டு சரியாக மழை பெய்யாததால் ஒசூா் பகுதியில் குடிநீா் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அம்மனை வழிபட்டால் இந்த ஆண்டு நல்ல மழை பொழியும் என நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com