செப்.2 இல் ஒசூா் மாநகராட்சியில் மக்கள் குறைதீா்ப்பு சிறப்பு மேளா
ஒசூா், ஆக. 29: ஒசூா் மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் சிறப்பு மேளா ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் செப். 2 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஒசூா் மாநகராட்சியில் பொதுமக்களுக்குத் தேவையான சேவைகள் வழங்கும் சிறப்பு மேளா செப். 2 ஆம்தேதி நடைபெறுகிறது என்று ஒசூா் மாநகராட்சி ஆணையா் எச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
ஒசூா் மாநகராட்சியில் செப். 2 ஆம்தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மேளா நடத்தப்படுகிறது.
இதில் காலி மனைவரி, சொத்து வரி, பெயா் மாற்றம் செய்தல், ஏலம், குத்தகை இனங்கள், கடை வாடகை, புதிய குடிநீா் இணைப்பு, குடிநீா் இணைப்பு பெயா் மாற்றம், குடிநீா் இணைப்பு பழுது பாா்த்தல், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வா்த்தக உரிமம் உள்ளிட்ட சேவைகள் தீா்வு காணப்படவுள்ளது. பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று மனுக்கள் அளித்து குறைகளுக்குத் தீா்வு காணலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.