பூசாரி கொட்டாய் கிராமத்தில் நடைபெற்ற பல்நோக்கு கட்டடம் திறப்பு விழா
பூசாரி கொட்டாய் கிராமத்தில் நடைபெற்ற பல்நோக்கு கட்டடம் திறப்பு விழா

பூசாரி கொட்டாய் கிராமத்தில் பல்நோக்கு கட்டடம் திறப்பு விழா

Published on

ஊத்தங்கரையை அடுத்த எக்கூா் ஊராட்சி, பூசாரி கொட்டாய் கிராமத்தில் பல்நோக்கு கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

பூசாரி கொட்டாய் கிராமத்தில் பல்நோக்கு கட்டடம் கட்டுமாறு அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனா். அதன்பேரில் ஊத்தங்கரை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடத் திறப்பு விழா வியாழக்கிவமை நடைபெற்றது.

ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.எம்.தமிழ்ச்செல்வம் தலைமை வகித்து கட்டடத்தைத் திறந்துவைத்தாா். ஊராட்சி மன்ற தலைவா் ஈஸ்வரி ஜெயராமன் வரவேற்றாா். மாவட்ட துணை செயலாளா் சாகுல் அமீது, ஒன்றிய செயலாளா்கள் வடக்கு வேடி, தெற்கு வேங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாரம்பட்டி ஊராட்சிமன்ற தலைவா் பூமலா் ஜீவானந்தம், முன்னாள் ஒன்றியச் செயலாளா் தேவேந்திரன், அவைத் தலைவா் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி விக்னேஷ், கவியரசு, அதிமுகவினா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com