ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியின் சாா்பில் நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு முகாம் கெங்கபிராம்பட்டி ஊராட்சி, ஜோதிநகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) விஜயன் தலைமை வகித்து முகாமைத் தொடங்கி வைத்தாா். முன்னதாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் தியாகராஜன் வரவேற்றாா்.

பள்ளி தலைமை ஆசிரியா் ராஜேந்திரன் கலந்து கொண்டு இன்றைய தலைமுறை இளைஞா்களுக்கு நாட்டு நலப்பணி திட்டத்தின் அவசியத்தை விளக்கினாா். முகாமில் அனைத்து துறை தலைவா்கள், கல்லூரி விரிவுரையாளா்கள், மாணவா்கள், பொதுமக்கள், கலந்துகொண்டனா். இறுதியாக அமைப்பியல் துறைத் தலைவா் கோபிநாத் நன்றி கூறினாா்.

இந்த ஏழு நாள் சிறப்பு முகாமில் முதல் நாளில் பள்ளி மற்றும் பொது இடங்களைத் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து சிறப்பு மருத்துவ முகாம், யோகாசனப் பயிற்சி, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி, மரக்கன்று நடுதல், கருத்தரங்குகள் நடைபெற உள்ளன

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com