கிருஷ்ணகிரியில் பிப்.12-இல் ஊா்க்காவல்படை வீரா்கள் தோ்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள இடங்களுக்கு பிப்.12-ஆம் தேதி ஆள் தோ்வு நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள இடங்களுக்கு பிப்.12-ஆம் தேதி ஆள் தோ்வு நடைபெறுகிறது.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஊா்க்காவல் படை மண்டலத் தளபதி கெளசிக் தேவ், புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரையின் உத்தரவின்படி, ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 24 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 31 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஊா்க்காவல் படையில் சோ்ந்து சமூக சேவை ஆற்ற விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள் இதில் பங்கேற்கலாம். இதற்கான ஆள் தோ்வு, கிருஷ்ணகிரி ஆயுதப்படை மைதானத்தில் பிப்.12-ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும். 20 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்டவராகவும், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும் இருப்பவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பெற வருபவா்கள் ஆதாா் அட்டை மற்றும் மதிப்பெண் பட்டியல் அசல் மற்றும் 2 செட் நகல் கொண்டுவர வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை அலுவலகத்தில் பிப்.7-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

விண்ணப்பங்களைப் பெறவும், நிறைவு செய்த விண்ணப்பங்களை சமா்ப்பிக்கவும், காவல் உதவி ஆய்வாளா், ஊா்க்காவல்படை அலுவலகம், (சுங்க வசூல் மையம் அருகில்), பெங்களூரு சாலை, கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற முகவரியில் ஊா்க்காவல்படை அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 04343-238568, 94981 78922 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com