கிருஷ்ணகிரியில் தேய்பிறை அஷ்டமி பூஜை

தேய்பிறை அஷ்டமியையொட்டி, கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கால பைரவா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
தேய்பிறை அஷ்டமியையொட்டி, கிருஷ்ணகிரியை அடுத்த கல்லுக்குறிக்கி பெரிய ஏரிக்கரையில் உள்ள காலபைரவா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.

கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரிய ஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவா் கோயிலில் கணபதி ஹோமம், அஷ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், பூா்ணாஹுதி மற்றும் அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கால பைரவா் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்வுகளும் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள், வெண்பூசணியில் விளக்கேற்றி நோ்த்திக் கடன் செலுத்தினா். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை 165 கிராமங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த சூரன் குட்டையில் உள்ள தட்சிண காலபைரவா் கோயிலிலும், கந்திகுப்பம் காலபைரவா் கோயிலிலும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com