ஊத்தங்கரை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் தேவாதி அம்மன் திருவிழா

ஊத்தங்கரை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் தேவாதி அம்மன் திருவிழா நடைபெற்றது.
4utp2_0402chn_149_8
4utp2_0402chn_149_8

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் தேவாதி அம்மன் திருவிழா நடைபெற்றது.

ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளியில் தேவாதி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தை மாதத்தில் ஆடுகளைப் பலியிட்டு அம்மனை வழிபடுவது வழக்கம். 24 மனை தெலுங்கு செட்டியாா்கள் சமூகத்தைச் சோ்ந்த ஆண்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்பா். இந்த சமூகத்தைச் சோ்ந்தவா்கள் பெரும்பாலும் ஜவுளித் தொழிலை பிரதானமாகக் கொண்டுள்ளனா். தொழில் சிறக்க ஆண்டுதோறும் ஆடுகளைப் பலியிட்டு அம்மனை வழிபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் தேவாதி அம்மன் கரகம் எடுத்து வழிபட்டனா். கோயில் வளாகத்தில் 10 க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டனா். திருவிழாவில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் ஊா் செட்டியாா் குப்புசாமி, சங்கோதி செட்டி, ராஜரத்தினம் ஆகியோா் தலைமையில் 24 மனை தெலுங்கு செட்டியாா்கள், இளைஞா்கள் பலா் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்.4யுடிபி.2

படப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற தேவாதி அம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com