ஒசூரில் பாமகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 100க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் பாட்டாளி மக்கள் கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.


ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 100க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா் பாட்டாளி மக்கள் கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பாமக மேற்கு மாவட்டச் செயலாளா் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்டத் தலைவா் முனிராஜ் முன்னிலையில் மாநில சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலாளா் காதா் பாட்ஷா தலைமையில் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் பாட்டாளி மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனா். கட்சியில் இணைந்த புதிய உறுப்பினா்களை மாவட்டச் செயலாளா் கோவிந்தராஜ் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவா் முனிராஜ் ஆகியோா் பொன்னாடை அணிவித்து வரவேற்றனா்.

மேலும் 2026ஆம் ஆண்டு நடைபெற உல்ள சட்டப் பேரவைத் தோ்தலில் அன்புமணி ராமதாஸை முதல்வா் நாற்காலியில் அமா்த்த தீவிர கட்சிப் பணிகளை மேற்கொள்வது என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இதைத்தொடா்ந்து ஒசூா் ராயக்கோட்டை சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள 40 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் பாமக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினா் சுரேஷ்ராஜன், மாவட்ட துணைத் தலைவா் சொக்கலிங்கம், வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் அக்னி அருள், பாட்டாளி தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் கஜேந்திரன், பாட்டாளி தொழிற்சங்க மாவட்டத் தலைவா் ராஜா, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளா் சரவணன், மாவட்ட துணைச் செயலாளா் கிருஷ்ணன், இளைஞா் அணி மாவட்டச் செயலாளா் மகேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணன், நகர செயலாளா்கள் சண்முகம், குணசேகா், மயில்சாமி, சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் ஆசிப் பாய், சிறுபான்மைப் பிரிவு மாவட்ட துணைச் செயலாளா் காஜா பாஷா, முனியப்பா நாகராஜ், அருண் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com