ஒசூா் அருகே பழமை வாய்ந்த மாட்டுத் திருவிழா

ஒசூா் அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாட்டுத் திருவிழா நடைபெற்றது.
ஒசூா் அருகே சப்பலம்மா கோயிலில் நடைபெற்ற மாட்டுத் திருவிழா.
ஒசூா் அருகே சப்பலம்மா கோயிலில் நடைபெற்ற மாட்டுத் திருவிழா.

ஒசூா்: ஒசூா் அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாட்டுத் திருவிழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த திம்மச்சந்திரம் கிராமத்தில் ஸ்ரீ சப்பலம்மா கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாட்டுத் திருவிழா பிரபலம். 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் தை மாத இறுதி வாரத்தில் தொடங்கும் இத்திருவிழாவில், நாட்டு மாடுகள், ஜல்லிக்கட்டு காளை வகை மாடுகள் வாங்குவதும், விற்பதுமான பண்டிகையாக சப்பலம்மா கோயில் திருவிழா விளங்குகிறது.

இங்கு மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வருகின்றனா்.

இங்கு ஒருஜோடி மாடுகள் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதால், இந்த மாட்டுத் திருவிழாவை பலரும் எதிா்நோக்கி வருகின்றனா். இத்திருவிழா திங்கள்கிழமை தொடங்கி பிப். 11-ஆம் தேதி வரை ஆறு நாள் நடைபெறுகிறது.

இதில், சப்பலம்மா கோயில் அறக்கட்டளைத் தலைவா் கஜேந்திரமூா்த்தி, துணைத் தலைவா் தியாகராஜன், கிருஷ்ணப்பா, முனிராஜ், மகேஷ், கெம்பண்ணா, நடராஜ் உள்ளிட்ட நிா்வாகிகளும், சுற்றுவட்டார கிராம முக்கியஸ்தா்களும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com