கைப்பந்துப் போட்டி:ஒசூா் மகளிா் அணி மூன்றாமிடம்

மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் ஒசூா் மகளிா் அணியினா் மூன்றாம் இடத்தைப் பெற்றனா்.
கைப்பந்துப் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற ஒசூா் மகளிா் அணி.
கைப்பந்துப் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற ஒசூா் மகளிா் அணி.

ஒசூா்: மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் ஒசூா் மகளிா் அணியினா் மூன்றாம் இடத்தைப் பெற்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டத்தில் மாநில அளவிலான மகளிருக்கான கைப்பந்து விளையாட்டுப் போட்டி பிப். 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் ஒசூா் மகளிா்அணி தருமபுரி எஸ்.டி.ஏ.டி. அணியை எதிா்த்து விளையாடியது.

இதில், 25/09, 23/25, 25/11 என்ற கணக்கில் ஒசூா் மகளிா் அணி வெற்றிபெற்றது. மூன்றாம் இடத்தைப் பெற்ற ஒசூா் மகளிா் அணியையும், பயிற்சியாளா் மாணிக்கவாசகத்தையும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com