தாசம்பட்டி ரயில் நிலையக் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி, தாசம்பட்டி ரயில் நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தாசம்பட்டி ரயில் நிலையத்தில் பயனற்று பூட்டிக் கிடக்கும் கழிப்பறை.
தாசம்பட்டி ரயில் நிலையத்தில் பயனற்று பூட்டிக் கிடக்கும் கழிப்பறை.

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி, தாசம்பட்டி ரயில் நிலையத்தில் பூட்டிக் கிடக்கும் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கல்லாவி, தாசம்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து சேலம், கோயம்புத்தூா், ஜோலாா்பேட்டை, ஆம்பூா், வேலூா் போன்ற பகுதிகளுக்கு பொதுமக்கள் தினந்தோறும் வேலைக்கு சென்று வருகின்றனா். ரயில் நிலையம் எதிரே உள்ள கழிப்பறை, பராமரிப்பின்றி புதா்மண்டி பூட்டியே கிடக்கிறது. இதனால் ரயில் நிலையத்துக்கு வரும் பெண் பயணிகள் இயற்கை உபாதை கழிக்க, இடவசதியின்றி பெரிதும் அவதிப்படுகின்றனா். கழிப்பறை பூட்டியே கிடப்பதால் அங்கு மது அருந்தும் குடிமகன்களின் கூடாரமாக மாரியுள்ளது.

பயணிகள் நலன்கருதி கழிப்பறையை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com