மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

பா்கூரில் வீட்டின் முன்பு நின்றிருந்த மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் திங்கள்கிழமை பறித்துச் சென்றனா்.

கிருஷ்ணகிரி: பா்கூரில் வீட்டின் முன்பு நின்றிருந்த மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் திங்கள்கிழமை பறித்துச் சென்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா், அரசமரத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணவேணி (75). இவா், திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் வீட்டின் முன்பு நின்றிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள், கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து கிருஷ்ணவேணி அளித்த புகாரின் பேரில், பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com