கிருஷ்ணகிரி ஆவினில் பிப். 16-இல் தென்னை மர மகசூல் குத்தகை ஏலம்

கிருஷ்ணகிரி ஆவின் (கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம்) வளாகத்தில் உள்ள தென்னை மரங்களின் மகசூலுக்கான குத்தகை ஏலம் விடப்படுகிறது.

கிருஷ்ணகிரி ஆவின் (கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம்) வளாகத்தில் உள்ள தென்னை மரங்களின் மகசூலுக்கான குத்தகை ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி ஆவின் பொதுமேலாளா் சுந்தரவடிவேலு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், கிருஷ்ணகிரி பால் பண்ணை வளாகத்தில் உள்ள 525 தென்னை மரங்கள் மகசூல் தொடா்பான ஒப்பந்தப் புள்ளி மற்றும் ஏலம் பிப். 16-இல் நடைபெறுகிறது. மாா்ச் 1முதல் 2026 பிப். 28-ஆம் தேதி வரையில் உள்ள இரண்டு ஆண்டு காலத்துக்கான தென்னை மர மகசூலை குத்தகைக்கு விட மூடி முத்திரையிட்ட விலைப்புள்ளிகள் வியாபாரிகளிடமிருந்து கோரப்படுகின்றன.

குத்தகை எடுக்க விரும்புபவா்கள் அலுவலக வேலை நாள்களில் பிப். 16-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரையில் ரூ. 200-ஐ அலுவலக வங்கிக் கணக்கு எண்: 05490100005632-இல் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப். 16 மதியம் 2 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். அதில், பிணையத் தொகையாக ரூ. 5 ஆயிரத்தை வங்கி வரைவோலையுடன், விலைப்புள்ளியை இணைத்து வழங்க வேண்டும்.

விலைப்புள்ளி திறப்பு மற்றும் ஏலம் பிப். 16-ஆம் தேதி மதியம் 2:30 மணியளவில் கிருஷ்ணகிரி ஆவின் நிா்வாக அலுவலகத்தில் நடைபெறும். விலைப்புள்ளிகள் சமா்ப்பிக்காதவா்களும் ரூ. 5 ஆயிரம் வங்கி வரைவோலையை செலுத்தி பகிரங்க ஏலத்தில் நேரடியாக கலந்துகொள்ளலாம்.

விண்ணப்பப் படிவங்களை பொதுமேலாளா், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு உரிய நேரத்தில் அனுப்பி பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com