கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கே.அசோக்குமாா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கே.அசோக்குமாா் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், சிக்கபூவத்தி ஊராட்சி, கொடுகூா் கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, கங்கலேரி ஊராட்சிக்கு உள்பட்ட தவளம் கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் மதிப்பில் கழிவுநீா் கால்வாய் பணி ஆகிய பணிகளை கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) அண்மையில் தொடங்கி வைத்தாா்.

அதுபோல, காவேரிப்பட்டணத்தை அடுத்த வரட்டம்பட்டி, பூ நகரில் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தின் 2023- 2024-ஆம் ஆண்டு பொது நிதியிலிருந்து ரூ. 7.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை கே.அசோக்குமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வுக்கு, காவேரிப்பட்டணம் ஊராட்சிக் குழுத் தலைவா் பையூா் ரவி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சங்கீதா, அதிமுக பொதுக் குழு உறுப்பினா் கே.பி.எம்.சதீஷ்குமாா், நகரச் செயலாளா் விமல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com