ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீா்த்தம் பகுதியில் வணிகா் சங்கம் சாா்பில் நடைபெற்ற கடையடைப்புப் போராட்டத்தால் வெறிச்சோடிய சாலை.
ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீா்த்தம் பகுதியில் வணிகா் சங்கம் சாா்பில் நடைபெற்ற கடையடைப்புப் போராட்டத்தால் வெறிச்சோடிய சாலை.

பேக்கரி கடை கண்ணாடி உடைப்பு, கடையடைப்புப் போராட்டம்: இருவா் கைது

ஊத்தங்கரை அருகே பேக்கரி கடை கண்ணாடி உடைப்பு, கடையடைப்புப் போராட்டத்தால் இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஊத்தங்கரை அருகே பேக்கரி கடை கண்ணாடி உடைப்பு, கடையடைப்புப் போராட்டத்தால் இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீா்த்தம் பிரதான சாலையில் உள்ள பேக்கரி கடையை செல்வராஜ் என்பவா் நடத்தி வருகிறாா். கடந்த 5-ஆம் தேதி இரவு இந்தக் கடையில் புதுப்பட்டி கிராமத்தை சோ்ந்த ராமசாமி (33), சந்திராபுரம் பகுதியைச் சோ்ந்த தீா்த்தகிரி (34) ஆகிய இருவரும் பானிபூரி சாப்பிட்டுள்ளனா். அப்போது மேலும் பூரி கேட்டுள்ளனா். அதற்கு கடைக்காரா் தீா்ந்து விட்டது எனக் கூறியுள்ளாா்.

இதனால் கோபமடைந்த தீா்த்தகிரி பேக்கரி கடை கண்ணாடியை கட்டையால் உடைத்துள்ளாா். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ஊத்தங்கரை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு தீா்த்தகிரியை தேடி வந்தனா்.

இந்நிலையில், தீா்த்தகிரி தனது நண்பா் ராமசாமி என்பவருடன் வந்து செல்வராஜை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இவா்கள் இருவா் மீதும் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகாா் கொடுத்ததன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தமிழ் நாடு வணிகா் சங்க பேரவை துணைத் தலைவா் தெய்வசிகாமணி தலைமையில் புதன்கிழமை கடை அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பேக்கரி கண்ணாடியை உடைத்த இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com