இன்று திமுக பொதுச் செயலாளா் கனிமொழி ஒசூா் வருகை

திமுக துணைப் பொதுச் செயலாளரும் தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுத் தலைவருமான கனிமொழி வெள்ளிக்கிழமை ஒசூா் வருகிறாா்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும் தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுத் தலைவருமான கனிமொழி வெள்ளிக்கிழமை ஒசூா் வருகிறாா்.

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, தருமபுரி மேற்கு, தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் 2024 நாடாளுமன்றத் தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஒசூா் - தளி சாலை ஆனந்த் கிராண்ட் பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்புக் கூட்டம் கழக துணை பொதுச் செயலாளா் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் அனைவரும் வருகை தந்து தங்களது கோரிக்கைகளை மனுவாக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் நேரில் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com